Header Ads

வீட்டில் இருந்தே தொழில்செய்ய உதவும் இணையத்தளங்கள் - 2017



உலகில் தற்போது இருக்கும் தொழில்களில் சிறந்தவற்றில் Freelancing எனப்படும் இத்தொழிலும் ஒன்று எனலாம். ஒரு சுதந்திர பணியாளராக (Freelancer) இருப்பதனால் பல நன்மைகள் உண்டு. நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து, விரும்பியவாறு, உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்றவாறு தொழில் செய்யலாம். இதனால் நீங்கள் முழு சுதந்திரத்தை உணர்வீர்கள். இத்தொழில் மூலம் உங்கள் ஏனைய தொழில்களில் ஏற்படுவது போல் மிகுந்த மன அழுத்தம் ஏற்படாது.
எப்படியிருந்தாலும், இது ஒரு நிரந்தரமான தொழில் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு Project முடியும் போதும் இன்னொரு Project இற்கு நீங்கள் பயணிப்பீர்கள்.

 சரி, இந்த தொழிலை எங்கு தான் செய்வது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த வாய்ப்புக்களை வழங்கும் பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் மிக சிறந்தவை சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. Upwork

ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான தொழில் வழங்குனர்களை இத்தளம் கொண்டுள்ளது. Upwork(முன்னர் oDesk) எனப்படும் இந்த நிறுவனம் அணைத்து வகையான Freelancer களுக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. இது குறுகிய கால திட்டங்கள்(Short time Project) மற்றும் நீண்ட கால திட்டங்கள்(Long Time Project) போன்ற இருவகைகளையும் கொண்டுள்ளது. நீங்கள் மணித்தியால அடிப்படையில் அல்லது Project அடிப்படையில் உங்கள் சம்பளத்தைப் பெறலாம். 
ஒரு கணக்கை ஆரம்பித்துக்கொண்டு இங்கு இருக்கும் 75 மேற்பட்ட வகைகளிலான தொழில்களில் உங்களால் முடியுமானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இத்தளத்தின் சிறப்பம்சம் என்னவெனில், இங்கே நீங்கள் உங்கள் வேலை தொடர்பாக எந்த ஆவணங்களும் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. தானாகவே நீங்கள் செய்த வேலைகளுக்கான ஊதியத்தை இது கணித்துக்கொள்ளும். நீங்கள் வாரம்தோறும் உங்கள் சம்பள தொகையை பெற்றுக்கொள்ளவும் முடியும். இங்கே நீங்கள் ஆக்கங்கள் எழுதுதல், மொழிபெயர்ப்பு, மென்பொருள் உருவாக்கம்(Software Development), வலை வடிவமைப்பு(Web Development), சந்தைப்படுத்தல்(Marketing), வடிவமைப்பு (Designing) போன்ற இன்னும் பல வகையான வேலைகளைப் பெற முடியும்.

இத்தளம் குறித்த மேலதிக இதவிக்குறிப்புகள்:  Great Tips to Make money in Upwork


2. Freelancer

Freelancer எனப்படும் இத்தளம் எல்லாவகையான வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது. மென்பொருளாளர்கள் (Programmers), வடிவமைப்பாளர்கள் (Designers), எழுத்தாளர்கள், கணினி தொழில் முறையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நிதி ஆலோசகர்கள் இன்னும் எல்லாவகையான தொழில் செய்பவர்களுக்கும் இந்த இணையத்தளம் பொருத்தமானதாக இருக்கும். இங்கு ஒரு கணக்கை ஆரம்பித்து இலகுவாக உங்கள் வேலையே தொடரலாம். மணித்தியால அடிப்பை மற்றும் Project அடிப்படையில் சம்பளம் பெறலாம். 

3. Guru

 Guru.com ஒரு மிக விரிந்த வலைப்பின்னல் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவெனில், இது தொழினுட்பவியார்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள், மற்றும் வணிக திட்டங்களை வழங்குவதில் சிறப்பானது. விசேடமாக Software Developers, Game Developers இத்தளத்தை தேர்ந்தெடுக்கலாம்.


4. People per Hour

ஒரு கவர்ச்சியான Profile ஒன்றை உருவாகிக் கொள்ளுங்கள், வேலைகளை தேடிப்பாருங்கள், உங்கள் விண்ணப்பங்களை அனுப்புங்கள், முடியுமென்றால் ஒரு வீடியோ மூலம் உங்கள் சேவைகளை Promote செய்யுங்கள்.
PeoplePerHour.com தளத்தில் எல்லா விடயங்களும் நேர்த்தியானவை. 
நீங்கள் ஒரு Client ஐ பிடித்து உங்கள் தரமான சேவையை வழங்கி அதன் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளலாம்.
வடிவமைப்பாளர்களுக்கு இத்தளம் மிக சிறப்பானது. நீங்கள் ஒரு Desiger ஆகவோ அல்லது Web Developer ஆகவோ இருந்தால் peopleperhour தளம் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

இந்தப் பதிவும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். மேலுள்ள இணையதளங்களில் நீங்கள் சரியான முறையில் முயற்சி செய்து ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொண்டால் உங்கள் உங்களது வாழ்க்கையை கொண்டுசெல்ல மிக உதவியாக இருக்கும். நீங்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாக கூட வேலை செய்ய முடியும். இங்கே பொறுமை தான் மிக முக்கியம். உங்கள் பெறுபேறுகளை நீங்கள் அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். 
தொடர்ந்தும் முயற்சித்தால் நீங்கள் வெற்றி பெற முடியும்.

1 comment:

Powered by Blogger.