Header Ads

60 நாட்களுக்கு முன் உங்கள் Facebook பெயரை மாற்ற எளிய வழி



Facebook எனப்படும் முகநூலைப் பற்றி நான் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சிறுவர் முதல் பெருசுகள் வரை அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முன்னணியில் இருப்பது Facebook தளம் தன். 
இதன் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. எமது சமூகத்தின் வாழ்வியல் நடைமுறைப் போக்கையே இன்று இந்த இணையத்தளம் தலைகீழாக மாற்றி விட்டது. 
சரி விசயத்துக்கு வருவோம். நீங்கள் Facebook ஐ பயன்படுத்தும் போது சில வேளைகளில் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம். அச்காந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் Facebookபெயரைமாற்றிக்கொண்டாலும் கூட அதிலே ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஒரு முறை நீங்கள் பெயர் மாற்றிவிட்டால் மீண்டும் உங்கள் பெயரை மாற்றுவதற்கு 60 நாட்கள் காத்திருக்க வேண்டும். உண்மையில் பேக் ஐடி களின் அட்டகசன்களைக் குறைக்க இது ஒரு சிறந்த வழிமுறி தான். ஆனால் நீங்கள் தவறுதலாக உங்கள் பெயரை பிழையானதாக மாற்றிவிட்டால் என்ன செய்வது. அதைத்தான் இங்கே கூறப் போகிறேன்.  
 
கீழே குறிப்பிடப்படும் படிமுறைகளை கையாண்டு உங்கள் Facebook பெயரை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ளலாம்.

  • பேஸ்புக்கில் 'Account Setting' இற்கு சென்று 'Edit name' பகுதியில் நீங்கள் பெயர்மாற்றம் காலம் முடியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • நீங்கள் உங்கள் பெயர் மாற்றுவதற்கான காலத்தை அடையாவிட்டால் பின்வருவது போன்ற ஒரு தகவல் காட்டப்படும்.
    YOU CAN’T CHANGE YOUR NAME RIGHT NOW BECAUSE YOU’VE ALREADY CHANGED IT WITHIN THE LAST 60 DAYS. LEARN MORE.

    • அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இந்த லிங்க் ஐ க்ளிக் செய்து Facebook இற்கு செல்லுங்கள். 
    • அதில் 'Continue' என்பதை க்ளிக் செய்யுங்கள். இந்த லிங்க் உண்மையில் எதற்கு பயன்படுவது என்றால் உங்கள் கணக்கை ஹேக்கர் களிடம் இருந்து மீட்பதற்கு பயன்படுவது. யாராவது உங்களுக்கு தெரியாமல் உங்கள் பெயரிலே மாற்றம் செய்தால் அப்போது பயன்படுவது. இதை பயன்படுத்தி மற்ற சந்தர்ப்பங்களிலும் பெயர் மாற்றலாம்.

      • அடுத்து உங்கள் Facebook Password ஐ மாத்திரம் மாற்றிக் கொள்ளவும். 
      • அடுத்தகட்டத்திற்கு செல்லும் போது இது போன்ற ஒரு தகவல் உங்களுக்கு காட்டப்படும்.

        • அடுத்து நீங்கள் முதலில் பயன்படுத்திய பெயர்கள் அத்தனையும் அங்கே காட்டப்படும். உங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்து Contine செய்யவும். அவ்வளவு தான்!நீங்கள்உங்கள் பெயரை மாற்றிக்கொண்டீர்கள். 


        குறிப்பு:
        இந்த முறையில் புதிய ஒரு பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. நீங்கள் கண்டிப்பாக புதிய பெயர் தான் மாற்ற வேண்டுமெனில் இந்த request form மூலம் Facebook ஐ தொடர்பு கொள்ளலாம்.. 

        பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

        No comments:

        Powered by Blogger.